< Back
மாநில செய்திகள்
விநாயகர் ஊர்வலத்தில் போலீசாாிடம் தகராறு
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

விநாயகர் ஊர்வலத்தில் போலீசாாிடம் தகராறு

தினத்தந்தி
|
20 Sept 2023 1:15 AM IST

திருவிடைமருதூர் அருகே விநாயகர் ஊர்வலத்தில் போலீசாாிடம் தகராறு செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவிடைமருதூர்;

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் மடவளாக விநாயகர் ஊர்வலம் நடந்தது. அப்போது திருவிடைமருதூர் வடக்கு மட வளாகத்தைச் சேர்ந்த குணசேகரன் மகன் அரவிந்தன்(வயது19), அதே பகுதி ஒடுக்கு தெருவை சேர்ந்த பூமிநாதன் மகன் வினோத்( 27) ஆகிய இருவரும் அரசு மருத்துவமனை அருகே ஊர்வலம் வந்த போது போக்குவரத்துக்கு இடையூராக பட்டாசு வெடித்தனர். இதை பாதுகாப்புக்கு வந்த போலீசார் கண்டித்தனர். பின்னர் காவிரி ஆற்றில் விநாயகர் கரைக்கும் போது அரவிந்தன், வினோத் ஆகிய இருவரும் போலீசாரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தன், வினோத் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்