< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கணவருடன் தகராறு: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
|23 July 2024 4:12 AM IST
கணவருடன் ஏற்பட்ட தகராறில் விரக்தி அடைந்த இளம்பெண் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை,
சென்னை எம்.ஜி.ஆர். நகர், சூளைப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். கூலி வேலை செய்து வருகிறார். உதயகுமார் கடந்த ஆண்டு ஜெயரூபினி (20 வயது) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். உதயகுமாருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சில மாதங்களாகவே ஜெயரூபினி கணவரை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் உதயகுமார் தனது மனைவியை அழைத்து வர மாமியார் வீட்டுக்கு சென்றார். அப்போது இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த ஜெயரூபினி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எம்.ஜி.ஆர். நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.