< Back
மாநில செய்திகள்
ஈரான் நாட்டு பெண்ணிடம் நடுரோட்டில் தகராறு
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

ஈரான் நாட்டு பெண்ணிடம் நடுரோட்டில் தகராறு

தினத்தந்தி
|
11 Aug 2023 7:30 PM GMT

கோவையில் மது குடிக்க வற்புறுத்தி ஈரான் நாட்டு பெண்ணிடம் நடுரோட்டில் தகராறு செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரேஸ்கோர்ஸ்

கோவையில் மது குடிக்க வற்புறுத்தி ஈரான் நாட்டு பெண்ணிடம் நடுரோட்டில் தகராறு செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஈரான் பெண்

ஈரான் நாட்டை சேர்ந்த 37 வயது பெண், கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பார்ம் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இதற்காக தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார்.

அந்த பெண்ணுக்கு, கோவையை சோ்ந்த மற்றொரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. அவர் மூலம் புதுசித்தாபுதூரை சேர்ந்த ராஜூ(வயது 32) என்பவர் அறிமுகம் ஆனார். ராஜூவுக்கு, ஈரான் நாட்டு மொழி பேச தொியும். இதனால் அவரிடம், அந்த பெண் நட்பாக பழகி வந்தார்.

மது குடிக்க வற்புறுத்தல்

இதை பயன்படுத்தி கொண்ட ராஜூ சம்பவத்தன்று இரவில் அந்த பெண்ணை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு கிளப்பிற்கு உணவு சாப்பிட அழைத்தார்.

அங்கு ராஜூவுடன், அவரது நண்பர் நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த ஜோன் பிரான்சிஸ்(40) என்பவரும் இருந்தார். அவர்கள் மது குடித்து இருந்தனர்.

கைது

மேலும் அந்த பெண்ணையும் மது குடிக்க கட்டாயப்படுத்தினர். தொடர்ந்து வற்புறுத்தியதால், அவர் கிளப்பை விட்டு வெளியே வந்தார். அவரை பின் தொடர்ந்து வந்த 2 பேரும், நடுரோட்டில் வைத்து தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்தனர். இதை அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அவர்களிடம் ஈரான் நாட்டு பெண் அளித்த புகாரின்பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ராஜூ மற்றும் ஜோன் பிரான்சிஸ் கைது செய்யப்பட்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்