< Back
மாநில செய்திகள்
மது அருந்தும்போது தகராறு... நண்பரை கத்தியால் வெட்டிய கல்லூரி மாணவர் கைது
சென்னை
மாநில செய்திகள்

மது அருந்தும்போது தகராறு... நண்பரை கத்தியால் வெட்டிய கல்லூரி மாணவர் கைது

தினத்தந்தி
|
7 May 2023 10:10 AM IST

சென்னை ஓட்டேரியில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் நண்பரை கத்தியால் வெட்டிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டை சுப்புராயன் தெருவை சேர்ந்தவர் லலித் பிரசாத் (வயது 19). இவர், தனது நண்பர்கள் சிலருடன் அதே பகுதியில் உள்ள மூலிகை பூங்காவில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தார்.

அப்போது தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் தீபக்(19), மற்றொரு நண்பரின் மதுவை சேர்த்து குடித்து விட்டார். இதனால் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தீபக், கத்தியால் லலித் பிரசாத்தை குத்திவிட்டு தப்பிச் சென்றார். இதில் காயமடைந்த லலித் பிரசாத் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி தலைமைச் செயலக காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபக்கை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்