< Back
மாநில செய்திகள்
கடை அடைக்கும் நேரத்தில் புரோட்டா கேட்டு தகராறு - ஓட்டல் உரிமையாளரை தாக்கிய மர்ம கும்பல்
மாநில செய்திகள்

கடை அடைக்கும் நேரத்தில் புரோட்டா கேட்டு தகராறு - ஓட்டல் உரிமையாளரை தாக்கிய மர்ம கும்பல்

தினத்தந்தி
|
27 Jan 2024 8:37 PM IST

புரோட்டா இல்லை என கூறியதால் ஓட்டல் உரிமையாளரை கும்பல் ஒன்று கட்டையால் தாக்கியது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில், புரோட்டா தீர்ந்து போனதால் ஓட்டல் உரிமையாளரை கும்பல் ஒன்று கட்டையால் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள உணவகத்தில் இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியிருக்கிறது. கடை அடைக்கும் நேரத்தில் வந்து புரோட்டா கேட்ட கும்பலிடம், புரோட்டா இல்லை என கூறியதால் ஓட்டல் உரிமையாளரான அப்துல் லத்தீப்பை அந்த கும்பல் கட்டையால் தாக்கியது.

கடந்த 21-ம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் புகாரளித்தும் நடவடிக்கை ஏதும் இல்லையென காவல்துறை மீது குற்றம்சுமத்தப்படும் நிலையில், சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்