< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
மோட்டார்சைக்கிளில் முந்திச்செல்வதில் தகராறு: வாலிபருக்கு அரிவாள் வெட்டு
|11 March 2023 9:17 AM IST
மோட்டார்சைக்கிளில் முந்திச்செல்வதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
சென்னையை அடுத்த புழல் காவாங்கரை கண்ணப்ப சாமி நகரை சேர்ந்தவர் அஜித்குமார்(வயது 23). எலக்ட்ரீஷியனான இவர், மோட்டார் சைக்கிளில் செங்குன்றம் நாரவாரிகுப்பம் சி.கே.மாணிக்கநாதர் தெருவில் உள்ள தனது நண்பர் சதீஷ் என்பவரை பார்க்க வந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த டில்லிபாபு(24), அக்பர்(25), மோகேஷ்(24) ஆகிய 3 பேர் அஜித்குமாரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த அஜித்குமார், சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
மோட்டார்சைக்கிளில் முந்திச்செல்வதில் ஏற்பட்ட தகராறில் அஜித்குமாரை வெட்டியது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்.