மீன் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு - நள்ளிரவில் கணவன் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்
|மதுரையில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் கணவன் மனைவி இருவரும் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை,
மதுரையில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் கணவன் மனைவி இருவரும் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலூர் அருகே ஆண்டிகோயில்பட்டி கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் கருப்பசாமி மற்றும் செல்வி. சில நாட்களாக பெய்த கன மழையால் அருகில் உள்ள இளமுனி கண்மாய் நிரம்பியுள்ளது. கண்மாய் நிரம்பும் போதெல்லாம் கிராம மக்கள் அனைவரும் கண்மாயில் மீன் பிடிப்பது வழக்கம்.
இந்த நிலையில், இத்தம்பதியர் கண்மாயில் பிடிக்கும் போது ராஜதுரை மற்றும் மழுவேந்தி தம்பதியரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜதுரை நள்ளிரவில் வீட்டின் முன் தூங்கிக் கொண்டிருந்த கருப்பசாமி மற்றும் அவரது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ராஜதுரை மீது போலீசில் புகாரளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு, கொலை செய்த ராஜதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.