< Back
மாநில செய்திகள்
மது அருந்தும்போது தகராறு: இளைஞரை கத்தியால் தாக்கி கொன்ற நண்பர்கள் - சென்னை அருகே பயங்கரம்
மாநில செய்திகள்

மது அருந்தும்போது தகராறு: இளைஞரை கத்தியால் தாக்கி கொன்ற நண்பர்கள் - சென்னை அருகே பயங்கரம்

தினத்தந்தி
|
19 Oct 2023 11:53 PM IST

சென்னை அருகே மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் சக நண்பனை கத்தியால் தாக்கி கொலை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை அருகே மீஞ்சூர் அடுத்த லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த அஜித் என்பவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மாயமானதாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ராமரெட்டி பாளையம் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக தகவல் கிடைத்தது.

அதன்படி அங்கு வந்த போலீசார் கிணற்றில் இருந்த உடலை மீட்டு விசாரணை நடத்தியதில், காணாமல் போன அஜித் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அஜித்திற்கு மது வாங்கி கொடுத்து முன் விரோதம் காரணமாக அவரது நண்பர்களே கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அஜித்தின் நண்பர்களான நாகராஜ், கார்த்திக், வசந்தகுமார் ஆகிய மூன்று பேரை கைது செய்த போலீசார் தலைமறைவான மோகன், கணேஷ், சாய் ஆகியோரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்