< Back
மாநில செய்திகள்
மனைவியுடன் ஏற்பட்ட தகராறை தட்டி கேட்டதால் ஆத்திரம்: மாமனாரை கட்டையால் அடித்துக்கொன்ற மருமகன்
சென்னை
மாநில செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறை தட்டி கேட்டதால் ஆத்திரம்: மாமனாரை கட்டையால் அடித்துக்கொன்ற மருமகன்

தினத்தந்தி
|
3 Aug 2022 12:54 PM IST

மனைவியுடன் ஏற்பட்ட தகராறை தட்டி கேட்டதால் ஆத்திரமடைந்து மாமனாரை கட்டையால் அடித்து கொன்ற மருமகனை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பொன் விளைந்த களத்தூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் துலுக்கானம் (வயது 60). விவசாயி. அவரது மனைவி சம்பூரணம் (56). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். துலுக்கானத்தின் 2-வது மகள் ஜெயந்தி அதே பகுதியை சேர்ந்த டார்ஜன் (34) என்பவரை திருமணம் செய்து கொண்டார். டார்ஜனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மகளுடன் ஏற்பட்ட தகராறு குறித்து ஜெயந்தியின் தாய் சம்பூரணம் மற்றும் தகப்பன் துலுக்கானம் ஆகியோர் மருமகன் டார்ஜனிடம் தட்டி கேட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த டார்ஜன் மாமனார் துலுக்கானம் மற்றும் மாமியார் சம்பூரணம் ஆகியோரை கட்டையால் தாக்கி விட்டு தப்பி ஓடினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த துலுக்கானம் துடி,துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த சம்பூரணத்தை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் தப்பியோடிய டார்ஜனை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்