< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை உடைத்து தகராறு
|10 Oct 2023 1:25 AM IST
டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை உடைத்து தகராறில் ஈடுபட்டார்.
அருப்புக்கோட்டை அருகே மறவர்பெருங்குடியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் பாலவநத்தம் அரசு டாஸ்மாக்கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் இருந்த போது கடம்பன்குளத்தை சேர்ந்த வசந்தகுமார் (வயது 23) என்பவர் பணம் கொடுக்காமல் மது பாட்டில் கேட்டதாக கூறப்படுகிறது. பணம் இல்லாததால் செந்தில்குமார் மதுபாட்டில் தர மறுத்ததால் வசந்தகுமார் மதுபான கடை மீது பெட்ரோல் பாட்டிலை வீசியதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்த பாட்டிலை உடைத்து செந்தில்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.அப்போது அவரை அங்கிருந்தவர்கள் பிடிக்க முயன்ற போது அங்கிருந்து தப்பி ஓடி அவர் தலை மறைவானார். இதுகுறித்து செந்தில்குமார் தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தகுமாரை கைது செய்தனர்.