< Back
மாநில செய்திகள்
மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகள் - அதிமுகவினரிடையே வாக்குவாதம்
மாநில செய்திகள்

மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகள் - அதிமுகவினரிடையே வாக்குவாதம்

தினத்தந்தி
|
16 Jun 2024 1:59 PM IST

பயணிகள் வெளியே வரும் பகுதியில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வந்த கார் நின்று கொண்டிருந்தது.

மதுரை,

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரைக்கு விமானம் மூலம் இன்று காலை வந்தார். இதையொட்டி, கட்சியின் பொதுச்செயலாளரை வரவேற்க, மதுரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள ஏராளமான அதிமுக நிர்வாகிகள், மதுரை விமான நிலையத்துக்கு கார்களில் வந்தனர்.

பயணிகள் வெளியே வரும் பகுதியில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வந்த கார் நின்று கொண்டிருந்தது. அப்போது விமான நிலைய அதிகாரிகள் அந்த காரை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறும் இல்லையென்றால் அந்த காரை லாக் செய்துவிடுவதாகவும் கூறியதாக தெரிகிறது. இதனால் அங்கிருந்த அதிமுக நிர்வாகிகளுக்கும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது

மேலும் செய்திகள்