< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்.பி. இடையே கடும் வாக்குவாதம்
மாநில செய்திகள்

ராமநாதபுரத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்.பி. இடையே கடும் வாக்குவாதம்

தினத்தந்தி
|
17 Jun 2023 8:38 PM IST

அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்.பி. வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் இன்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி எம்.பி.க்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நவாஸ் கனி எம்.பி. விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த போது, அவர் வருவதற்கு முன்பாகவே விழா தொடங்கப்பட்டதாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த நவாஸ் கனி எம்.பி., இது குறித்து கலெக்டரிடம் கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்.பி. இடையே இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருவரும் வாக்குவாதம் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்