< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஈரோட்டில் திமுக - அதிமுகவினரிடையே வாக்குவாதம்... சாலையில் கோலம் போட்டதை தட்டிக் கேட்டதால் தகராறு
|6 Feb 2023 10:33 AM IST
ஈரோடு கிழக்கு தொகுதியில், தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக, அதிமுகவினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட அசோகாபுரத்தில், திமுகவினர் பல்வேறு சாலைகளில், திமுக கொடி மற்றும் உதயசூரியன் சின்னத்தை கோலங்களாக வரைந்திருந்தனர்.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சரும் தேர்தல் பொறுப்பாளர் கே.சி. கருப்பண்ணன் திமுகவினரிடம் கேட்டபோது, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அப்போது, விதிமுறைகளை மீறி கோலங்கள் போட்டது குறித்து தேர்தல் அலுவலரிடம் புகார் அளிக்க இருப்பதாக கருப்பண்ணன் கூறினார்.