< Back
மாநில செய்திகள்
ஐயப்பன் கோவில் பூஜையில் தகராறு - சாதிய மோதலாக மாறியதால் பரபரப்பு
மாநில செய்திகள்

ஐயப்பன் கோவில் பூஜையில் தகராறு - சாதிய மோதலாக மாறியதால் பரபரப்பு

தினத்தந்தி
|
27 Nov 2022 9:40 PM IST

கோவில் பூஜையின் போது ஏற்பட்ட தகராறு, சாதிய மோதலாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே கோவில் பூஜையின் போது ஏற்பட்ட தகராறு, சாதிய மோதலாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சோளிங்கரை அடுத்த சூரை கிராமத்தில், ஐயப்பன் கோவில் பூஜையின் போது இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில், சிலருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் எழுதப்பட்டிருந்த தலித் பெண் தலைவரின் பெயர் மற்றும் 2 கவுன்சிலர்களின் பெயர்களை மர்ம நபர்கள் பெயிண்ட் பூசி அழித்ததால், மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்தப் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், கோயிலில் அழிக்கப்பட்டிருந்த ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கவுன்சிலர்களின் பெயர்களை வருவாய்த்துறை அதிகாரிகள் மீண்டும் எழுதி வைத்தனர்.

மேலும் செய்திகள்