< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
காசு கொடுக்காமல் மதுபானம் கேட்டு மேற்பார்வையாளரிடம் தகராறு
|16 Sept 2023 12:15 AM IST
டாஸ்மாக் கடையில் காசு கொடுக்காமல் மதுபானம் கேட்டு மேற்பார்வையாளரிடம் தகராறு:தொழிலாளி கைது
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே தேவூர் சந்தைப்பேட்டையில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மேற்பார்வையாளராக விஜயகுமார் வேலை செய்து வருகிறார். தேவூர் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் பழனிவேல் (வயது 39). தொழிலாளி. சம்பவத்தன்று மேற்கண்ட டாஸ்மாக் கடைக்கு சென்ற பழனிவேல், மேற்பார்வையாளர் விஜயகுமாரிடம் காசு இல்லாமல் மதுபானம் வேண்டும் என்று கேட்டுள்ளார். மேலும் கடையின் டேபிளில் விற்பனைக்கு வைத்திருந்த மது பாட்டில்களை எடுத்து உடைத்து தகராறு செய்துள்ளார். தொடர்ந்து கடையின் கதவை உடைத்து விஜயகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து விஜயகுமார் அளித்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிவேலை கைது செய்தனர்.