< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
"நான் கணித்தது படியே அர்ஜென்டினா சாம்பியன்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
|19 Dec 2022 9:10 AM IST
நான் கணித்த படியே உலக கோப்பையை அர்ஜென்டினா வென்று விட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை,
உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் விளையாடின. மொத்தம் 120 நிமிடங்கள் இந்த போட்டி நடைபெற்றது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் சரி சமமாக 3-3 என்ற கோல் கணக்கில் இருந்தன. அதனால் போட்டியில் முடிவை எட்ட பெனால்டி ஷூட்-அவுட் முறை நடத்தப்பட்டது.
அதில் 4-2 என முன்னிலையில் பிரான்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி. இந்த வெற்றியை உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் நான் கணித்தது படியே உலக கோப்பையை அர்ஜென்டினா அணி கைப்பற்றியது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். பிரான்ஸ்-அர்ஜென்டினா அணிகள் மோதிய உறுதி போட்டியை ஜெயக்குமார் எனது செல்போனில் கண்டு களித்தார். அப்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு கூறினார்.