< Back
மாநில செய்திகள்
சி.வி.சண்முகம் மீது கோபமா..? - கே.பி முனுசாமி பரபரப்பு  பேட்டி
மாநில செய்திகள்

சி.வி.சண்முகம் மீது கோபமா..? - கே.பி முனுசாமி பரபரப்பு பேட்டி

தினத்தந்தி
|
15 Oct 2022 6:46 PM IST

சி.வி.சண்முகம் குறித்த கேள்விக்கு கே.பி.முனுசாமி பதிலளித்தார்

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள நியாய விலைக்கடையின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று கடையை திறந்து வைத்த கே.பி.முனுசாமி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது சி.வி.சண்முகம் குறித்த கேள்விக்கு கே.பி.முனுசாமி பதிலளித்தார்.அவர் கூறியதாவது ;

சி.வி.சண்முகம் என்னுடைய தம்பி.அவர் மீது கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான எண்ணம் எந்த சூழ்நிலையிலும் வராது.என்னைப்போலவே உணர்வுள்ள உணர்ச்சிமிக்க தொண்டர் அவர் .

இந்த இயக்கத்துக்காகவே அர்ப்பணித்துக்கொண்டிருக்கிற குடும்பம் அவரின் குடும்பம். எப்படியாவது, சிண்டு முடித்து இந்த இயக்கத்தினுடைய வேகத்தையும், மீண்டும் ஆட்சி அமைப்பதையும் தடுக்க விஷமிகள் செய்கிற சித்து விளையாட்டு இது. தர்மம், உழைப்பு, சத்தியம், நியாயம் நின்று வெற்றிபெறும். என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்