< Back
மாநில செய்திகள்
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கடவுளும், மத நம்பிக்கைகளும் அவமதிக்கப்படுகின்றனவா? ஹலோ எப்.எம்.நிகழ்ச்சியில், விருந்தினர்கள் கருத்து
மாநில செய்திகள்

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கடவுளும், மத நம்பிக்கைகளும் அவமதிக்கப்படுகின்றனவா? ஹலோ எப்.எம்.நிகழ்ச்சியில், விருந்தினர்கள் கருத்து

தினத்தந்தி
|
10 July 2022 5:21 AM IST

ஹலோ எப்.எம்.மில் ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்' நிகழ்ச்சியில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கடவுள்களும், மத நம்பிக்கைகளும் அவமதிக்கப்படுகின்றனவா? என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகிறது.

ஹலோ எப்.எம்.மில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் 'ஸ்பாட்லைட்' நிகழ்ச்சியில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கடவுள்களும், மத நம்பிக்கைகளும் அவமதிக்கப்படுகின்றனவா? என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகிறது. இதில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தெய்வத்தமிழ் பேரவை அறக்கட்டளையின் நிறுவனர்-ஆகம அறிஞர் சத்தியவேல் முருகனார், நாட்டார் தெய்வங்கள் குறித்த ஆராய்ச்சியாளர், எழுத்தாளர் அ.கா.பெருமாள், திரைப்பட இயக்குனர் பேரரசு, எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா ஆதவன் தீட்சண்யா, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ஆகியோருடன் நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜசேகர் கலந்துரையாடுவதை கேட்கலாம்.

மேலும் செய்திகள்