பெரம்பலூர்
குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிகிறார்களா?-அதிகாரிகள் ஆய்வு
|குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிகிறார்களா? என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில், மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு போலீசார் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் விதமாக பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குழந்தை தொழிலாளர்கள் யாரேனும் கடைகளில் பணிபுரிகிறார்களா? என்று ஆய்வு செய்தனர். பின்னர் தொழிலாளர் நல வாரியத்தின் சிறப்பு உதவி ஆணையர் மூர்த்தி, ஆய்வாளர் சாந்தி, அனைவருக்கும் கல்வி இயக்கத்தை சேர்ந்த அய்யப்பன், சகி ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி கீதா, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து ஆகியோர் இணைந்து புதிய பஸ் நிலையத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் பஸ் பயணிகளிடம் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் விதமாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினா். அதன்பின்னர் கடைகள், பஸ்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை ஓட்டினர்.