< Back
மாநில செய்திகள்
கீழடி அகழாய்வு பணிகளை பார்வையிட்ட தொல்லியல் துறை மாணவ-மாணவிகள்
சிவகங்கை
மாநில செய்திகள்

கீழடி அகழாய்வு பணிகளை பார்வையிட்ட தொல்லியல் துறை மாணவ-மாணவிகள்

தினத்தந்தி
|
27 Jun 2023 12:28 AM IST

கீழடி அகழாய்வு பணிகளை தொல்லியல் துறை மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.

திருப்புவனம்,

தமிழர்களின் நாகரிகத்தை பறை சாற்றும் கீழடியில் ஏற்கனவே 8 கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் முடிந்து விட்டன. இதுவரை கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருட்கள் அங்குள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. தற்போது 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையை பற்றி படிக்கும் 4 பேர், சென்னை பல்கலைக்கழத்தை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 9 பேர் கீழடி, கொந்தகை பகுதிகளில் நடைபெறும் அகழாய்வு பணிகள் குறித்து பயிற்சி பெற வந்துள்ளனர். இவர்களில் ஒரு மாணவர், 8 மாணவிகள் அகழாய்வு நடைபெறும் பணிகளை பார்வையிட்டனர். அங்கு, பொருட்களை கண்டுபிடிக்கும் நிலை குறித்தும், பொருட்கள் கிடைக்கும் உயரம், அகலம், ஆழம் குறித்தும், மேலும் கணக்கீடு செய்வது பற்றியும் மற்றும் பல பயிற்சிகள் எடுப்பதற்காக வந்துள்ளனர். இவர்கள் 10 நாட்கள் தங்கி பயிற்சி பெற உள்ளனர்.

இவர்களுக்கு கீழடி பிரிவு இணை இயக்குனர் ரமேஷ் மற்றும் தொல்லியல் அலுவலர்கள் அஜய், காவ்யா ஆகியோர் அகழாய்வு பணிகள் குறித்த விவரங்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்