< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தொடர் கனமழை காரணமாக ஆரணி ஆற்றில் 4-வது முறையாக வெள்ளப்பெருக்கு
|13 Dec 2022 4:00 PM IST
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்படுவதால் கிராம மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆரணி ஆற்றில் தொடர் கனமழை காரணமாக மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காரணி கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. தரைப்பாலத்திற்கு முன் தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் நெல்வாய், புதுப்பாளையம் உள்ளிட்ட 10 கிராம மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
ஆரணி ஆற்றில் தற்போது 4-வது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சமயங்களில் தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்படுவதால் கிராம மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே தரைப்பாலத்திற்கு மாற்றாக மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.