< Back
மாநில செய்திகள்
அரணாரை மாரியம்மன் கோவில் சப்பர தேரோட்டம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

அரணாரை மாரியம்மன் கோவில் சப்பர தேரோட்டம்

தினத்தந்தி
|
9 May 2023 7:51 PM GMT

அரணாரை மாரியம்மன் கோவில் சப்பர தேரோட்டம் நடந்தது.

பெரம்பலூர் புறநகர் அரணாரையில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த 23-ந் தேதி பூப்போடுதல் நிகழ்ச்சி நடந்தது. அதனைத்தொடர்ந்து 30-ந் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. இதில் மாவிளக்கு வழிபாடு கடந்த 7-ந் தேதியும், தீமிதி திருவிழா நேற்று முன்தினமும் நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று சப்பர (சகடை) தேரோட்டம் நடந்தது. இதில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் சப்பரத்தில் வைக்கப்பட்டு, கோவிலில் இருந்து சகடை புறப்பட்டது. முக்கிய வீதிகளின் வழியாக சகடை இழுத்து வரப்பட்டு மீண்டும் கோவிலை அடைந்தது. வீதிகளில் பொதுமக்கள் தேங்காய், பழம், மாவிளக்கு போன்றவற்றை படைத்து, வழிபட்டனர். அலங்காரம் மற்றும் பூஜைகளை கோவில் அர்ச்சகர் ரவி அய்யர் நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் கோவில் திருவிழா கிராமக்குழு தலைவர் மணி, நிர்வாகிகள் சிவபிரகாசம், பிரபாகரன், வார்டு கவுன்சிலர் துரை.காமராஜ் மற்றும் கோவில் பூசாரிகள், பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்