< Back
தமிழக செய்திகள்
அரக்கோணம்: கோவில் திருவிழாவில் கிரேன் சரிந்து விழுந்த விபத்து - 3 பேர் பலி
தமிழக செய்திகள்

அரக்கோணம்: கோவில் திருவிழாவில் கிரேன் சரிந்து விழுந்த விபத்து - 3 பேர் பலி

தினத்தந்தி
|
22 Jan 2023 10:51 PM IST

அரக்கோணத்தில் கோவில் திருவிழா ஒன்றில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர்.

அரக்கோணம்,

நெமிலி தாலுகா கீழவீதி கிராமத்தில் மண்டியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த மயிலேறு நிகழ்ச்சியின் போது எதிர் பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் முத்துகுமார் (39), பூபாலன் (40), ஜோதிபாபு (19) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் மேலும் சுமார் 8-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்களை புன்னை மருத்துவமனைக்கும், அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். மேலும் சிலருக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் திருவிழாவின் போது விபத்து ஏற்பட்டது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் அந்த கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் செய்திகள்