< Back
மாநில செய்திகள்
தியாகதுருகம் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

தியாகதுருகம் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

தினத்தந்தி
|
21 March 2023 12:15 AM IST

குற்ற சம்பவங்களை தடுக்க தியாகதுருகம் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.

தியாகதுருகம்,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலைகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், குடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துமாறு காவல்துறையினருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி தியாகதுருகம் பகுதிக்குட்பட்ட விருகாவூர் சாலை, தியாகதுருகம் புறவழிச்சாலை பிரியும் இடங்கள், வடதொரசலூர் பிரிவு சாலை, வாழவந்தான் குப்பம் ஆகிய 5 இடங்களில் 14 கண்காணிப்பு கேமராக்கள் தியாகதுருகம் காவல்துறை சார்பில் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்