< Back
மாநில செய்திகள்
தமிழ் திரையுலகில் பாலியல் புகார்கள் தெரிவிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை - அமைச்சர் சாமிநாதன் பேச்சு
மாநில செய்திகள்

'தமிழ் திரையுலகில் பாலியல் புகார்கள் தெரிவிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை' - அமைச்சர் சாமிநாதன் பேச்சு

தினத்தந்தி
|
12 Sept 2024 10:03 PM IST

தமிழ் திரையுலகில் பாலியல் புகார்கள் தெரிவிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ் திரையுலகில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"தமிழ் திரையுலகில் பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவிக்க சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி ஏற்கனவே கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மனோதத்துவ நிபுணர்களும் இருக்கிறார்கள். பாலியல் தொல்லை குறித்து புகாரளிக்க தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. புகார் அளிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்."

இவ்வாறு அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்