நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்... மாவட்ட தலைவர்களுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை
|150க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. அரசியலுக்கு வருவதாக அவர் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அவரது இயக்கம் மற்றும் அவரது செயல்பாடுகளால் விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள், பொதுமக்கள் இடையே அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சென்னையை அடுத்த பனையூரில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தொடங்கிய இந்த கூட்டத்தில் நேரடியாக தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், வேறு கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக கூறப்பட்டு உள்ளது.