< Back
மாநில செய்திகள்
நெருங்கும் வடகிழக்கு பருவமழை... தலைமைச் செயலாளர் இறையன்பு திடீர் ஆலோசனை
மாநில செய்திகள்

நெருங்கும் வடகிழக்கு பருவமழை... தலைமைச் செயலாளர் இறையன்பு திடீர் ஆலோசனை

தினத்தந்தி
|
1 Oct 2022 1:23 PM IST

வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை செயலர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார்.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நெருங்கிவரும் நிலையில், பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை செயலர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றுவரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் வருவாய் துறை, மின்துறை, நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையையொட்டி கண்காணிக்கக்கூடிய நீர் ஆதார இடங்கள் மற்றும் மக்கள் பாதிக்கக்கூடிய இடங்கள், அவர்களை தங்கவைப்பதற்கான இடங்கள் ஆகியவை ஆலோசனை மேற்கொண்டு அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்