< Back
மாநில செய்திகள்
யோகாவில் சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு
விருதுநகர்
மாநில செய்திகள்

யோகாவில் சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு

தினத்தந்தி
|
7 Aug 2023 1:43 AM IST

யோகாவில் சாதனை படைத்த மாணவியை பாராட்டினர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஜெயவர்த்தினி. இவர் யோகா போட்டியில் மாநில அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு யோகாவில் முதலிடம் பெற்று சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றார். துபாயில் நடைபெற்ற உலக அளவிலான யோகா போட்டியில் ஜெயவர்த்தினி சாம்பியன்ஷிப் பட்டம் பெற்று சாதனை படைத்தார். உலக அளவிலான யோகா பெடரேஷன் சார்பில் ஜெயவர்த்தினிக்கு சாம்பியன்ஷிப் பட்டமும், கோப்பையும் வழங்கப்பட்டது.


Related Tags :
மேலும் செய்திகள்