< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
சிலம்பாட்டத்தில் சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு
|29 Sept 2023 3:14 AM IST
சிலம்பாட்டத்தில் சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
விருதுநகர் சூலக்கரை மேல்நிலைப்பள்ளி 7-ம் வகுப்பு மாணவி ரேணுகாதேவி (வயது 12). இவர் சிலம்பத்தில் ஆர்வம் கொண்டு விருதுநகரில் சிலம்பாட்ட கழகத்தில் சிலம்பம் பயின்றார். தேனி மாவட்டத்தில் ஸ்ரீரெங்கா புரத்தில் நோபிள் உலக சாதனை பதிவிற்காக நடந்த சிலம்பாட்டநிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 16 மாவட்டங்களில் இருந்து 216 மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் தொடர்ந்து 5½ மணி நேரம் சிலம்பம் சுற்றி மாணவி ரேணுகாதேவி சாதனை படைத்தார். இவரது சாதனை நோபிள் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு அவருக்கு சான்றிதழும் கோப்பையும் வழங்கப்பட்டுள்ளது. சாதனை படைத்த மாணவி ரேணுகா தேவியை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவ-மாணவிகள் பாராட்டினர்.