கள்ளக்குறிச்சி
அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
|கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற திருக்கோவிலூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் வட்டார அளவில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று சாதனை படைத்தனர். இதையடுத்து விதை விருட்சம் அறக்கட்டளை சார்பில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு உதவி தலைமையாசிரியர் பி.ஜெயந்தி தலைமை தாங்கினார். முதுகலை தமிழ் ஆசிரியர் ரா.நாகராசன் வரவேற்றார். விதை விருட்சம் அறக்கட்டளை சிறப்பு தலைவர் மு.செந்தில்குமார் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ராணுவ வீரர் கல்யாண்குமார் மற்றும் ராகவேந்திரா கிரானைட் நிறுவனர் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கபடுத்தும் வகையிலும், அவர்கள் நல்லமுறையில் பயிற்சி பெறவும் விளையாட்டு உபகரணங்களை பள்ளிக்கு வழங்கினார். விழாவை விதை விருட்சம் அறக்கட்டளை தலைவர் அருணகிரி சிதம்பரநாதன் ஒருங்கிணைத்தார். முடிவில் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கலாவதி நன்றி கூறினார்.