சிவகங்கை
பாராட்டு விழா
|பாராட்டு விழா நடைபெற்றது.
காரைக்குடி,
காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி 2022-23-ம் ஆண்டு நடைபெற்ற 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. இதேபோல் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் 2-ம் இடம் பெற்றது. இதற்கான பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜபாண்டியன் வரவேற்றார். மாங்குடி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி தலைமை தாங்கி மாணவ-மாணவிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்களை பாராட்டி பரிசுகளை வழங்கினார். விழாவில் பள்ளி பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் செல்வராஜ், மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் ராஜ்மோகன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ரமேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.