< Back
மாநில செய்திகள்
சிலம்பம் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

சிலம்பம் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு

தினத்தந்தி
|
7 March 2023 2:00 AM IST

சிலம்பம் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

வேடசந்தூரில், வடமதுரை சாலையில் உள்ள பி.வி.எம். மெட்ரிக் பள்ளியில் மாணவ-மாணவிகளின் தனித்திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் யோகா, கராத்தே, சிலம்பம், நீச்சல், பரதநாட்டியம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது.

இதில், 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். அதேபோல் வேடசந்தூர் பி.வி.எம். பள்ளி மாணவ-மாணவிகளும் கலந்துகொண்டு விளையாடினர். அவர்களில் 21 பேர் சிலம்பம் போட்டியின் பல்வேறு பிரிவுகளில் முதல் மற்றும் 2-ம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றனர்.

இதையடுத்து போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில், பள்ளி தாளாளர் சூடாமணி வேலுமணி கலந்துகொண்டு, வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார். இதில், பள்ளி முதல்வர் செந்தில்குமார் மற்றும் ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்