< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளிகளில் படித்த22 மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்புக்கு தேர்வு
நாமக்கல்
மாநில செய்திகள்

அரசு பள்ளிகளில் படித்த22 மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்புக்கு தேர்வு

தினத்தந்தி
|
31 Dec 2022 12:48 AM IST

அரசு பள்ளிகளில் படித்து மருத்துவ படிப்புக்கு தேர்வான 22 மாணவ, மாணவிகளை நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் பாராட்டினார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் 200 பேர் நீட் தேர்வில் தகுதி பெற்றனர். அவர்களில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் 22 பேர் மருத்துவ படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

குறிப்பாக புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த முகேஷ், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் நாகேஸ்வரன், ராசிபுரம் அரசு அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் தன்ராஜ் ஆகியோர் முறையே 374, 373, 361 மதிப்பெண்கள் பெற்று, கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் பயில தேர்வாகி உள்ளனர். தேர்வாகி உள்ள 22 மாணவ, மாணவிகளில், 15 பேர் அரசு மருத்துவ கல்லூரிக்கும், 3 பேர் தனியார் கல்லூரிக்கும், 4 பேர் பல் மருத்துவக் கல்லூரிக்கும் தேர்வாகி உள்ளனர்.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி ஆகியோர் பாராட்டினர்.

மேலும் செய்திகள்