< Back
மாநில செய்திகள்
திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு

தினத்தந்தி
|
25 Sept 2023 1:00 AM IST

மத்தூர்:

மத்தூர் அருகே பெருகோபனப்பள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவ, மாணவிகள் திறனறி தேர்வு நடந்தது. இதில் இப்பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவி லத்திகா வெற்றி பெற்று 4 ஆண்டுகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை பெற தேர்வாகி உள்ளார். இதையடுத்து வெற்றி பெற்ற மாணவிக்கும், பயிற்சி அளித்த தமிழ் ஆசிரியர் திருமலைசாமி மற்றும் இதர ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர் பாராட்டி வாழ்த்தினார். மேலும் இந்த ஆண்டு சிறப்பு ஊக்கத்தொகைக்கான காசோலையை மாணவிக்கு தலைமை ஆசிரியர் வழங்கினார்.

மேலும் செய்திகள்