< Back
மாநில செய்திகள்
வேலைவாய்ப்பு முகாமில் 702 பேருக்கு பணி நியமன ஆணை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

வேலைவாய்ப்பு முகாமில் 702 பேருக்கு பணி நியமன ஆணை

தினத்தந்தி
|
6 March 2023 12:15 AM IST

கள்ளக்குறிச்சி அருகே நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 702 பேருக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி அருகே இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்.கலைக்கல்லூரி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் முரளிதரன் வரவேற்றார். வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குனர் லதா வேலைவாய்ப்பு முகாம் பற்றி திட்ட விளக்கவுரை ஆற்றினார். முகாமில் 153 தனியார் துறை நிறுவனத்தினர் கலந்து கொண்டு மொத்தம் 3,688 பேரிடம் நேர்காணல் நடத்தினர். இதில் 702 பேர் வேலைக்காக தேர்வு செய்யப்பட்டனர். மேலும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் நடத்தப்படும் திறன் பயிற்சிக்கு 37 பேர் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து தேர்வு செய்யப்பட்ட 702 பேருக்கு பணிநியமன ஆணையை கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார். இதில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்குனர் சுந்தர்ராஜன், டாக்டர் ஆர்.கே.எஸ்.கல்விநிறுவனங்களின் தலைவர் டாக்டர் மகுடமுடி, கல்லூரி முதல்வர் மோகனசுந்தர், துணை முதல்வர் ஜான் விக்டர் மற்றும் அரசு அலுவலர்கள் அரசு அலுவலர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்