< Back
மாநில செய்திகள்
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 32 பேருக்கு பணி நியமன ஆணை
விழுப்புரம்
மாநில செய்திகள்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 32 பேருக்கு பணி நியமன ஆணை

தினத்தந்தி
|
17 Jun 2023 12:15 AM IST

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 32 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேற்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 20 வேலையளிக்கும் தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைக்கு ஆட்களை தேர்வு செய்தனர். இதில் 13 மாற்றுத்திறனாளிகள் உள்பட 208 வேலைதேடும் இளைஞர்கள் கலந்துகொண்டனர். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்ற இம்முகாமில் 32 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதனை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் பாலமுருகன் வழங்கினார். அப்போது இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்