< Back
மாநில செய்திகள்
214 பேருக்கு பணி நியமன ஆணை
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

214 பேருக்கு பணி நியமன ஆணை

தினத்தந்தி
|
8 Oct 2023 12:07 AM IST

திருப்பத்தூரில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 214 பேருக்கு பணி நியமன ஆணையை கலெக்டர், எம்.எல்.ஏ. வழங்கினர்

திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். நல்லதம்பி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

முகாமில் 2,378 பேர் கலந்து கொண்டனர். இதில் 214 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், நல்லதம்பி எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.

இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரேவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்