தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்களின் நிலைகுறித்து கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம்
|தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்களின் நிலைகுறித்து கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்களின் நிலைகுறித்து கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் சார்பில் மக்களுக்குப் பயன்படும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கல்வி, வேளாண்மை, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலே இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டு துறை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கென சிறப்பு திட்ட செயலாக்கத்துறை என்பது செயல்பட்டு வருகிறது.
இந்தப் பிரிவின் மூலமாக அனைத்து மாவட்டங்களுக்கும் அரசினால் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் எந்த நிலையில் இருக்கிறது, திட்டங்கள் மக்களைச் சென்றடைகிறதா என்பது குறித்து கள ஆய்வு மேற்கொள்ளுவதற்காக மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இந்த சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் கீழ் திட்டங்களுடைய செயல்பாடுகள், தரவுகள் குறித்து மாவட்ட வாரியாக கள ஆய்வு மேற்கொள்ளுவார்கள்.
மாதத்தில் 4 நாட்கள் இந்த கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அரசின் திட்டங்கள் உரிய பயனாளிகளுக்கு சென்றடைகிறதா திட்டங்களில் முறைகேடுகள் நடைபெறுகின்றதா என்பதையெல்லாம் ஆய்வு செய்து அறிக்கையாக சமர்ப்பிப்பார்கள்.