< Back
மாநில செய்திகள்
எதிர்க்கட்சி துணை தலைவராக  ஆர்.பி.உதயகுமார் நியமனம்
சென்னை
மாநில செய்திகள்

எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமனம்

தினத்தந்தி
|
19 July 2022 12:25 PM IST

சட்டமன்ற அதிமுக துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமனம் செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித்தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், சென்னை, ஆழ்வார்பேட்டை, டி.டி.கே சாலை கிரவுண் பிளாசா சென்னை அடையார் பார்க் ஹோட்டலில் 17-07-2022 - ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித்தலைவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கழகத்தின் சார்பில் சட்டமன்ற கட்சித் துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமார் ((196) திருமங்கலம் தொகுதி, முன்னாள் அமைச்சர்) மற்றும் துணை செயலாளராக அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (66) போளூர் தொகுதி முன்னாள் அமைச்சர் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்" என்று அதில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முன்னதாக எதிர்க்கட்சித் துணைத்தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று இந்த புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.



மேலும் செய்திகள்