< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்ய அதிகாரிகள் நியமனம்
|1 July 2022 8:17 PM IST
மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களை ஆய்வுக்கு உட்படுத்த அதிகாரிகளை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த 20 அதிகாரிகளை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் கல்வி அதிகாரிகள் ஜூலை 31-க்குள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது.