தி.மு.க.வில் நிர்வாக ரீதியாக உள்ள 23 அணிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் - துரைமுருகன் அறிவிப்பு
|தி.மு.க.வின் 23 அணிகளுக்கு பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை,
தி.மு.க.வில் நிர்வாக ரீதியாக உள்ள 23 அணிகளுக்கும் பொறுப்பாளர்களாக துணை பொதுச்செயலாளர்களை நியமித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி விவசாய அணி, மருத்துவ அணி, தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட 5 அணிகளுக்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமியும், மாணவர் அணி, இளைஞர் அணி, சட்டத்துறை அணி உள்ளிட்ட 5 அணிகளுக்கு துணை பொதுச்செயலாளர் ஆ.ராசாவும் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சுற்றுச்சூழல் அணி, இலக்கிய அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை உள்ளிட்ட 5 அணிகளுக்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழியும், பொருளாளர் அணி, வர்த்தக அணி உள்ளிட்ட 4 அணிகளுக்கு துணை பொதுச்செயலாளர் பொன்முடியும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல் மேலும் 4 அணிகளுக்கு துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.