< Back
மாநில செய்திகள்
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்திற்கு குறை தீர்ப்பாளர் நியமனம்
அரியலூர்
மாநில செய்திகள்

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்திற்கு குறை தீர்ப்பாளர் நியமனம்

தினத்தந்தி
|
25 July 2023 12:17 AM IST

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்திற்கு குறை தீர்ப்பாளர் நியமிக்கப்பட்டார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் குறை தீர்ப்பாளராக பணிபுரிந்து வரும் நபர்களை பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்திற்கும் குறை தீர்ப்பாளராக பணிபுரிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் குறை தீர்ப்பாளராக பணிபுரிந்து வரும் வைத்தீஸ்வரன் என்பவர் பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட (ஊரகம்) குறை தீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, பொதுமக்கள் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் தொடர்பான புகார் மற்றும் குறைகள் ஏதும் இருப்பின் 8925811301 என்ற செல்போன் எண்ணிலும், ombudsman.ariyalur@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தெரிவிக்கலாம், என்று மாவட்ட கலெக்டா் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்