< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
விமான படையில் சேர விண்ணப்பிக்கலாம்
|30 July 2023 1:30 AM IST
இந்திய விமானப்படை மூலம் அக்னி வீரர்கள் தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் கலந்து கொள்வதற்கு வருகிற 17-ந்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்திய விமானப்படை மூலம் அக்னி வீரர்கள் தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் கலந்து கொள்வதற்கு வருகிற 17-ந்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு பிளஸ்-2 மற்றும் பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் திருமணம் ஆகாத ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். மேலும் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே உடற்தகுதி தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். எனவே அக்னி வீரர்கள் தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் http://agnipathvayu.cdac.in எனும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.