< Back
மாநில செய்திகள்
மின்னணு குடும்ப அட்டையில்  பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்
அரியலூர்
மாநில செய்திகள்

மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

தினத்தந்தி
|
23 May 2022 12:55 AM IST

மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல்-நீக்குதல் உள்ளிட்டவைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் 451 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் மாவட்டத்தில் முன்னுரிமை குடும்ப அட்டை, முன்னுரிமை குடும்ப அட்டை அந்தியோதயா அன்னயோஜனா, முன்னுரிமையற்ற குடும்ப அட்டை, முன்னுரிமையற்ற குடும்ப அட்டை சர்க்கரை அட்டை, பொருட்கள் இல்லா அட்டை ஆகிய குடும்ப அட்டை வகைகளை சார்ந்த 2,44,963 மின்னணு குடும்ப அட்டைகள் உள்ளன. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான நகல் குடும்ப அட்டை, மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் குடும்ப தலைவர் பெயர் மாற்றம் ஆகியவற்றை www.tnpds.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மின்னணு குடும்ப அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் எண் மாற்றம் செய்தல் மற்றும் குடும்ப அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள தங்களது பகுதிகளிலுள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், புதிய மின்னணு குடும்ப அட்டை பெறுவதற்கு 5 வயதிற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களின் ஆதார் நகல், குடும்ப தலைவர் புகைப்படம் மற்றும் குடியிருப்பிற்கான ஆவணங்களுடன் www.tnpds.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக புதிய மின்னணு குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம். தற்பொழுது புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கக்கோரும் விண்ணப்பங்கள் 15 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, புதிய மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பங்களை துரிதமாக தீர்வுகாணும் வகையில் வருவாய் ஆய்வாளர்கள் மூலம் தளவிசாரணை செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், விண்ணப்பதாரர்களுக்கு விரைவில் புதிய மின்னணு குடும்ப அட்டை கிடைப்பதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்த புகார்களுக்கு 1967 மற்றும் 1800 4255 901 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் குடும்ப அட்டை தொடர்பான புகார்களை குடும்ப அட்டைதாரர்கள் தெரிவிக்கலாம். அரியலூர் மாவட்டத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி பொதுமக்களிடமிருந்து 16,024 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இதில் 13,745 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 11,960 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட்டு, வழங்கப்பட்டுள்ளது. மேலும் 259 விண்ணப்பங்கள் தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்