< Back
மாநில செய்திகள்
தொழில்நுட்ப உதவியாளர்களுக்கான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
திருவாரூர்
மாநில செய்திகள்

தொழில்நுட்ப உதவியாளர்களுக்கான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

தினத்தந்தி
|
1 July 2023 12:15 AM IST

பிரதமர் குடியிருப்பு திட்டப்பணிகளை கண்காணிக்க தொழில்நுட்ப உதவியாளர்களுக்கான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வருகிற 5-ந்தேதி கடைசி நாள் என்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொழில் நுட்ப உதவியாளர்கள்

திருவாரூர் மாவட்ட கிராம ஊராட்சிகளில் பிரதமர் குடியிருப்பு திட்டப்பணிகளை கண்காணிப்பதற்காக வெளிமுகமை முறையில் 100 தொழில்நுட்ப உதவியாளர்களுக்கான காலிப்பணியிடங்களை தற்காலிகமாக ஊக்க ஊதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இந்த பணிக்கான விண்ணப்பங்களை தகுதியான நபர்களிடம் இருந்து வரவேற்கப்படுகிறது.

டிப்ளமோ பொறியியல் படிப்பில் சிவில் என்ஜினீயரிங் பிரிவில் பட்டம் பெற்றிருக்கவேண்டும். கட்டுமான பணியில் குறைந்தபட்சம் இரண்டு வருடம் அனுபவம் பெற்றிருக்கவேண்டும். 5 வருடத்திற்கு மேலான அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு பெற்றுள்ள உதவி பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயனாளிகளது வீட்டின் நிலைகளுக்கு ஏற்ப தவணை தொகைகள் விடுவிப்பதன் அடிப்படையில் மட்டுமே ஊக்கத்தொகை வழங்கப்படும்.

மொைபல் செயலி மூலம்

ஒரு வீட்டிற்கான 4 நிலைகளில் ஊக்கத்தொகையாக பேஸ்மண்ட் நிலைக்கு 30 சதவீத தொகை ரூ.450-ம், ஜன்னல் மட்டம் நிலைக்கு 30 சதவீத தொகை ரூ.450-ம், கூரை மட்டம் நிலைக்கு 20 சதவீத தொகை ரூ.300-ம், பணி முடிவுற்ற நிலைக்கு 20 சதவீத தொகை ரூ.300-ம் என மொத்தம் ரூ.1500 வேலையளிக்கும் முகமைக்கு விடுவிக்கப்படும்.

இந்த பணிக்காக ஊதியம் ஏதும் தனியாக வழங்கப்பட மாட்டாது.

நிலுவையிலுள்ள வீடுகள் பட்டியல் அனைவருக்கும் வீடு என்ற மொபைல் செயலி மூலம் ஒவ்வொரு தொழில்நுட்ப உதவியாளருக்கும் இணைக்கப்படும். பணியில் சேரும் தொழில் நுட்ப உதவியாளர்கள் வேலையளிக்கும் முகமையின் கீழ் வந்ததாக கருதப்படுவர்.

வருகிற 5-ந்தேதி கடைசி நாள்

எந்த வகையிலும் அரசுப்பணியில் உரிமை கோர இயலாது. திட்டம் செயலாக்கம் முடிவுற்றதும் பணியிலிருந்து விடுவிக்கப்படுவர். உரிய கல்விச்சான்று நகல் மற்றும் அனுபவ சான்று நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பத்தினை நேரடியாகவோ அல்லது அஞ்சல்வழியாகவோ வருகிற 5-ந்தேதிக்குள் தமிழ்நாடு மாநில ஊரகவாழ்வாதார இயக்கம், மாவட்டமுகமை, மேலாளர் என்ற முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். 5-ந் தேதிக்கு பின்னர் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்