< Back
மாநில செய்திகள்
போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற பதிவு செய்யலாம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற பதிவு செய்யலாம்

தினத்தந்தி
|
20 Jun 2023 7:54 PM IST

ஆதிதிராவிடர் மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற பதிவு செய்யலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

2022-2023-ம் கல்வியாண்டில் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான இணையதளம் கடந்த மே மாதம் 31-ந் தேதி வரை திறக்கப்பட்டு மாணவர்கள் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது.

தற்போது கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க மீண்டும் இணையதளம் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

எனவே மாணவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி ஆதிதிராவிடர் நல கல்வி உதவித்தொகையினை பெற்று கொள்ளலாம்.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்