< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
|6 July 2023 12:50 AM IST
மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், நகர் புறங்களிலுள்ள சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகிய அமைப்புகள் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்.
உரிய விதிமுறைகளின்படி தேர்வு செய்யப்படும் குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை வருகிற 10-ந் தேதிக்குள் வழங்க வேண்டும். இது குறித்து மேலும், தகவல் பெற ஊரக பகுதிகளாக இருப்பின் சம்பந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகிலும், நகர்புறமாக இருப்பின் சம்பந்தப்பட்ட சமுதாய அமைப்பாளரை அணுகி உரிய விபரம் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.