< Back
மாநில செய்திகள்
சிறைத் துறையில் காலியாக உள்ள சிறை அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம் - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
மாநில செய்திகள்

சிறைத் துறையில் காலியாக உள்ள சிறை அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம் - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

தினத்தந்தி
|
14 Sept 2022 5:57 AM IST

சிறைத் துறையில் காலியாக உள்ள சிறை அதிகாரி பணிக்கு அடுத்த மாதம் 13-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

சென்னை:

தமிழக சிறைத் துறையில் காலியாக உள்ள சிறை அதிகாரி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் (அக்டோபர்) 13-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது. இதில் காலியாக உள்ள சிறை அதிகாரி (ஆண்) 6 மற்றும் சிறை அதிகாரி (பெண்) 2 பணிக்கு டி.என்.பி.எஸ்.சி. தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கான தேர்வு, டிசம்பர் மாதம் 22-ந் தேதி காலை மற்றும் பிற்பகலில் நடைபெற உள்ளது. காலையில் பாடப்பிரிவு சார்ந்த தேர்வும் (300 மதிப்பெண்கள்) பிற்பகலில் தமிழ் தகுதித் தேர்வு (150 மதிப்பெண்கள்) மற்றும் பொதுப்பாடத் தேர்வும் (150 மதிப்பெண்கள்) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதுதவிர நேர்காணல் மற்றும் பதிவு தொடர்பாக 80 மதிப்பெண்கள் என மொத்தம் 680 மதிப்பெண்களுக்கு தேர்வை டி.என்.பி.எஸ்.சி. நடத்த இருக்கிறது.

மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் செய்திகள்