< Back
தமிழக செய்திகள்
பத்ம விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
காஞ்சிபுரம்
தமிழக செய்திகள்

பத்ம விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

தினத்தந்தி
|
15 Jun 2022 2:48 PM IST

பத்ம விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நமது தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டி தந்து தன்னலமிக்க பொது சேவை, தனித்துவமான வேலை மற்றும் விதிவிலக்கான சாதனை போன்ற மேன்மை பொருந்திய பணிகளுக்காக மத்திய அரசு பத்ம விருதுகள் வழங்க அறிவித்துள்ளது.

கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு வருகிற 2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழா அன்று பத்ம விருதுகள் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்களை www.padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் 15.9.2022-க்குள் விண்ணப்பித்து பயன்பெறவும், மேலும் விவரங்களுக்கு காஞ்சீபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை தொடர்பு கொள்ளலாம். எனவே காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு்ள்ளது.

மேலும் செய்திகள்