< Back
மாநில செய்திகள்
புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

தினத்தந்தி
|
2 Nov 2022 1:07 PM IST

புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் கடந்த 5-9-2022 அன்று அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பு தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை துவக்கி வைத்தார். இதுவரை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து மாணவிகள் திட்டத்தில் உதவி தொகையை பெற்று பயன் அடைந்துள்ளனர்.

தற்போது https://www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையதளத்தில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகள் விண்ணப்பிக்கலாம். மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும்.

தற்போது இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தவறிய 2, 3 மற்றும் 4-ஆம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகம் ஏதும் இருப்பின், சமூக நல இயக்குனரக அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்